ஜனாதிபதி முர்முவுடன் பப்புவா நியுகினியா வர்த்தக ஆணையர் சந்திப்பு

480
Advertisement

இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பழங்குடி
இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவுவை பப்புவா நியுகினியா நாட்டின்
வர்த்தக ஆணையர் டாக்டர் விஷ்ணுபிரபு மரியாதை நிமித்தமாக நேரில்
சந்தித்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து பவள விழா கொண்டாடவுள்ள ஆண்டில்,
முதன்முறையாகப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்ணான திரௌபதி
முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை
மட்டுமன்றி உலகிலுள்ள அனைத்து நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

இந்த நிலையில், பழங்குடி இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடான
பப்புவா நியுகினியா நாட்டின் வர்த்தகத் துறை ஆணையர் டாக்டர் விஷ்ணுபிரபு
இந்திய ஜனாபதி திரௌபதி முர்முவை அண்மையில் சந்தித்து தனது மகிழ்ச்சியையும்
வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

அப்போது முர்முவுக்கு தமிழகப் பாரம்பரியம் மற்றும் கலாசாரம் என்ற புத்தகத்தையும்,
உலகப் புகழ்பெற்ற ஊட்டி ஹோம்மேட் சாக்லெட்டுகளையும் வழங்கினார். அத்துடன்
நீலகிரி தோடர் சமுதாயத்தினர் தயாரித்த பூ வேலைப்பாடுகள் நிறைந்த சால்வையையும்
பரிசளித்தார்.

இந்த சந்திப்பின்போது, பப்புவா நியுகினியா நாட்டுடன் இந்தியாவின் வர்த்தக
உறவை மேம்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் ஆளுகைக்கு உட்பட்ட தீவான பப்புவா நியுகினியா
நாட்டில் சுமார் 60 லட்சம்பேர் வசித்துவருகின்றனர்.இவர்களில் பெரும்பாலோனர்
பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.