‘சார்பட்டா பரம்பரை திமுக பிரசார படம்…’ – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

189
Advertisement

சார்பட்டா பரம்பரை திமுக பிரசார படம் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டு, சார்பட்டா பரம்பரை திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

திமுகவுக்கும் குத்துச்சண்டைக்கும் சம்பந்தம் இல்லை எனவும் கூறினார்.

Advertisement

சார்பட்டா பரம்பரை திமுக பிரசார படம் என குற்றம் சாட்டிய அவர், உள்நோக்கோடு உண்மைக்கு மாறான காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்று உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல் திமுகவிற்கு தான் பொருந்தும் எனவும் ஜெயகுமார் தெரிவித்தார்.