“கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்”

324
Advertisement

கோவையை போல் சென்னையிலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து  ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகர், ரெங்கநாதன் தெரு கடை வீதியில் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், கோவையை போல சென்னையிலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை இருந்தால், அதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

இன்று நடைபெறவுள்ள மெகா தடுப்பூசி முகாமில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, குறிப்பிட்டனர்.