குறைந்ததா கொரோனா… இன்றைய நிலவரம்

221
Advertisement

தமிழ்நாட்டில் இரண்டாவது நாளாக நேற்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

தமிழகத்தில் தினந்தோறும் பெருந்தொற்று பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் நேற்று மேலும் 973 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 4 ஆயிரத்து 586 ஆக அதிகரித்துள்ளது.

பெருந்தொற்று பாதிப்பில் இருந்து 26 லட்சத்து 57 ஆயிரத்து 282 பேர் குணமடைந்துள்ள நிலையில், 11 ஆயிரத்து 147 பேர் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் பெருந்தொற்றுக்கு மேலும் 21 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 36 ஆயிரத்து 157 ஆக அதிகரித்துள்ளது.