குடை பிடித்தபடி விமானத்தில் இருந்து இறங்கிய மோடி : உற்சாக வரவேற்பு

355
Advertisement

4 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்கவாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குவாட் மற்றும் ஐ.நா. மாநாடுகளில் பங்கேற்க பிரதமர் மோடி 4 நாள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

இன்று அதிகாலை வாஷிங்டன் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, ஜாய்ன்ட் ஆண்ட்ரூஸ் விமான தளத்தில், இந்தியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வரவேற்றனர்.

பிரதமர் மோடியை வரவேற்க விமான தளத்தில் ஏராளமான அமெரிக்க வாழ் இந்தியர்கள் திரண்டிருந்தனர்.

பாதுகாப்பு வளையத்தை மீறி, காரில் இருந்து இறங்கிய பிரதமர் மோடி, அங்கு கூடியிருந்த மக்களை சந்தித்து கை குலுக்கினார்.