’கில்லி’ படப் பாணியில் ATM ஐ கொள்ளையடிக்க முயற்சி

312
Advertisement

கோவையில் ATM இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை வெள்ளலூர் பகுதியில் செயல்பட்டு வரும் கனரா வங்கி ATM மையத்தில் இருந்து இன்று அதிகாலை அலாரம் சத்தம் கேட்டுள்ளது. மேலும் வங்கி மேலாளருக்கு குறுஞ்செய்தியும் சென்றது.

இதனால் வங்கி மேலாளர் போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதையடுத்து போலீசார்  ATM மையத்திற்கு வந்து பார்த்தபோது, ATM மையத்தின் வெளிப்புறம் மற்றும் மையத்திற்குள் மிளகாய்பொடி கொட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

மேலும் ATM மையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களுக்கு கருப்பு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்கப்பட்ட தெரியவந்தது.

அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது ஹெல்மெட் அணிந்து கையுறை அணிந்து உள்ளே வந்த மர்ம நபர் ATM மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா களுக்கு ஸ்பிரே அடித்து உள்ளார்.

அதன் பின்னர் உள்ளே இருந்த அலாரத்தின் ஒயரை துண்டித்துள்ளார். அப்போது அலாரம் ஒலித்ததால், மிளகாய் பொடியை ATM மையம் மற்றும் வெளிப்புரத்தில் தூவி விட்டு அங்கிருந்து தப்பி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து தடையவியல் துறையினர், அங்கிருந்த தடையங்களை பதிவு செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்