காவலர்களுக்கு சந்தோஷமான செய்தி

187
Advertisement

காவல்துறையில் காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.

தமிழக காவல்துறையில் அனைவரின் உடல் நலனைப் பேணும் வகையிலும், குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடவும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமைக்காவலர் வரை அனைவருக்கும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.

காவல்பணியில் இடையறாது ஈடுபட்டு, சவாலான பணிகளை எதிர்கொள்ளும் காவலர்களுக்கு இந்த அறிவிப்பு அருமருந்தாக திகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்துணர்ச்சியோடும் உற்சாகத்தோடும் தங்களது பணியை காவல்துறையினர் மேற்கொள்ள வாரத்தில் ஒருநாள் விடுமுறை அறிவிப்பு வெளியாகியிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.