“கருணாநிதி பல ஆண்டுகளில் பெற்ற புகழை ஸ்டாலின் 100 நாட்களில் பெற்றுவிட்டார்”

219
Advertisement

கருணாநிதி பல ஆண்டுகளில் பெற்ற புகழை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 நாட்களில் பெற்றுவிட்டதாக, தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

தி.மு.க முப்பெரும் விழாவில் பேசிய அவர், இந்தியாவின் எட்டு திக்கிலும் தமிழக முதலமைச்சர் பற்றியே மக்கள் பேசுவதாக கூறினார்.

அண்ணாவிடம் கலைஞர் கேட்டுப்பெற்ற இதயத்தை, அவரிடம் கேட்காமலேயே ஸ்டாலின் எடுத்து வைத்துக் கொண்டதாக தெரிவித்தார்.

கலைஞர் முதலமைச்சரான பின்பு பல்லாண்டுகளில் பெற்ற புகழை, 100 நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுவிட்டதாக புகழாரம் சூட்டினார்.