ஒரு மாதத்திற்கு முன்பே IND vs Pak ஆடுகளம் ஹவுஸ்புள் 

245
Advertisement

7 வது டி 20 உலகக் கோப்பை தொடர் வருகின்ற, அக் 16 தேதி ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது, இத்தொடரில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ளும் நிலையில், இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோதுகிறது, இப்போட்டி வருகின்ற அக்டோபர் மாதம், 23 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய மைதானமான மேல்பர்ன் மைதானத்தில் நடக்கவுள்ளது,

பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் எப்போது மோதினாலும், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படும், அதுபோல இம்முறையும் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இப்போட்டியைப் பார்க்க தயாராகிவரும் நிலையில், இந்திய – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக அணைத்து போட்டிகளுக்கும், இதுவரை 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக ஐ சி சி தெரிவித்துள்ளது, மேலும் ஆசியக் கோப்பையிலிருந்து  இந்திய அணி மோசமாக வெளியேறியதால். இவ்விரண்டு அணிகளுக்கு நடுவில் கடுமையான போட்டி நிலவும் வாய்ப்பு அதிகம் உள்ளது, எனவே இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்துமா? என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.