உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.2,427 கோடியை விடுவித்தது

273
Advertisement

தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநில நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக 2,427 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.


நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியினை, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினத் துறை விடுவித்துள்ளது.

அதன்படி தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநில நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக 2,427 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 268 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது நடப்பு நிதியாண்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்கப்படும் முதல் தொகை ஆகும்.

இந்த நிதியானது குடிநீர், சுகாதாரம், மழைநீர் சேமிப்பு, நீர் மறுசுழற்சி, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்காக செலவிடப்பட உள்ளது.

மேலும் இந்த தொகை வரப்பெற்ற 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த தொகையை மாற்ற வேண்டும்.

தவறினால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வட்டியுடன் தொகையை விடுவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.