உலகின் செல்வாக்கு மிக்கோர் பட்டியலில் பிரதமர் மோடி, மம்தா

304
Advertisement

உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்றுள்ளனர்.

2021ஆம் ஆண்டில் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் பிரதமர் மோடி, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சீரம் நிறுவன சி.இ.ஓ. ஆதர் பூனவல்லா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங், இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

தாலிபான் அமைப்பின் இணை நிறுவனரான முல்லா அப்துல் கானி பராதர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.