இந்த மாவட்டத்தில் – புதிய கட்டுப்பாடுகள் அமல்

126
Advertisement

கோவையில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டதால், மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து நேற்றைய பாதிப்பு 201 ஆக பதிவாகியது. 215 பேர் குணமடைந்த நிலையில், 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த நிலையில்,  கோவையில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலாகிறது.

Advertisement

அதன்படி, மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் காய்கறி, பால், மருந்தகம், மளிகை கடைகள் தவிர பிற கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

உணவகங்கள், பேக்கரிகளில் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மால்கள், திரையரங்குகள், பூங்காக்கள் செயல்பட தடை தொடர உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.