அக்.11 வரை இரவு ஊரடங்கு தொடரும்

210
Advertisement

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பை தொடர்ந்து, வரும் அக்டோபர் 11-ம் தேதி வரை, இரவுநேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.

எனினும், பெங்களூருவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதால், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, வரும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக நகர காவல் ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.