டீசல் பதுக்கல் – இலங்கையில் கொந்தளிப்பு

498
Advertisement

இலங்கையில் தீக்கிரையாக்கப்பட்ட அமைச்சர்கள், மேயர்களின் வீடுகளில் நூற்றுக்கணக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களும், பல ஆயிரம் லிட்டர் டீசலும், உரமூட்டைகளும் பதுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் – 9 ஆம் தேதியில் இருந்து பிரதமர் பதவி விலகக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, நிதியமைச்சர் பசில் ராஜபக்சே உள்ளிட்ட அமைச்சர்கள், மேயர்கள் உள்ளிட்டோரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

அந்த வீடுகளில் சிலிண்டர்கள், டீசல், உரமூட்டைகள் ஆகியவற்றை பொமுமக்கள் பறிமுதல் செய்தனர். ராஜபக்சவின் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ச இல்லத்தில் மட்டும் 3,000 லிட்டர் டீசல், 300 யூரியாமூட்டைகள், மற்றும் 200 நெல்மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குருநாகல் பகுதியில் உள்ள அமைச்சர் ஜோன்சன் ஃபெர்ணாண்டோவின் வீட்டில் இருந்து, 80 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வட மத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத்தின் வீட்டில் 400 மூட்டைகள் உரம் பதுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.ஒரு மூட்டை உரம் இலங்கையில் 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் அமைச்சர்கள், மேயர்களின் இல்லங்களில் அத்தியாவசிய உணவுப்பொருட்களும், உரமூட்டைகளும் பதுக்கப்பட்டிருப்பது மக்களிடையே மேலும் கொந்தளிப்பை அதிகப்படுத்தியுள்ளது.