உலகத்துல சில இடங்கள் பனி சூழ் பிரதேசங்களாகவும், சில இடங்கள் வறட்சியாகவும் இருக்குறதாலதான் இயற்கையோட சமநிலை maintain ஆகிட்டு வருது. இதுல என்ன பிரமாதம்? எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே அப்படின்னு கேக்குறீங்களா. அப்படி ஒரு எண்ணம் இருக்குறதால தான் காலநிலை மாற்றம், climate changeன்னு topic எடுத்தாலே யாரும் பெருசா கண்டுக்குறதில்ல. ஆனா, global warmingனால வேகமா உருகிட்டு வர்ற ஆர்டிக் ஐஸ் பாறைகள்னால கடல் மட்டம் உயர்றத தாண்டி, தீவிரமான பாதிப்பு ஒண்ண கண்டுபிடிச்சு இருக்காங்க விஞ்ஞானிகள். இதனால, நமக்கு ஏற்படப்போற ஆபத்துகள், வரப்போற பயங்கரமான நோய்கள் பற்றிதான் வீடியோவுல டீடெய்லா பார்க்கப்போறோம்…
கடந்த வருசம் சைபீரியாவில் உறைஞ்சு கிடந்த பனிப்படலத்துக்குள்ள இருந்த வைரஸ் மாதிரிகள் பற்றிய ஆய்வறிக்கை, அறிவியல் வட்டாரங்கள்ல பல அதிர்வலைகளை ஏற்படுத்துச்சு. Permafrostன்னு சொல்லப்படுற உறைபனி உருகுறதால இது போன்ற வைரஸ்கள் உயிர் பெறும் பட்சத்துல, கொரோனா மாதிரியான தீவிர பெருந்தொற்றுகள் கூட ஏற்படலாம்ன்னு ஆய்வாளர்கள் தரப்பில் இருந்து எச்சரிக்கையும் வந்துருக்கு.
Zombie வைரஸ்ன்னு சொல்லப்படுற இந்த வகையான வைரஸ்கள் சுமார் 48,500 வருஷம் பழமையானது. இது போன்ற பழங்கால வைரஸ்கள் activate ஆச்சுன்னா, போலியோ மாதிரியான முந்தய கால நோய்கள் திரும்பி வர ரொம்பவே வாய்ப்பு இருக்கறதா Erasmus Medical Centre ஆய்வாளரான Marion Koopmans கருத்து தெரிவிச்சு இருக்காங்க.
Aix Marsielle பல்கலைக்கழகத்தைச் சேந்த Jean Michel Claverie அவரோட தலைமையில 2014ஆம் ஆண்டுல இருந்து சைபீரியாவில கண்டெடுக்கப்பட்ட Zombie வைரஸ் ஆய்வுகுட்படுத்தப்பட்டு, போன ஆண்டு ஒரு முக்கியமான அறிக்கை வெளியாச்சு. அதாவது, எத்தனை ஆண்டுகள் பனியில உறைஞ்சு கிடந்தாலும் ஒரு செல் உயிரினங்களான அமீபா போன்ற உயிரிகளை Zombie வைரஸ் தாக்கக் கூடிய தன்மையை இழக்கலன்னு உறுதியாகி இருக்கு. இந்த குறிப்பிட்ட வைரஸால மனிதர்களுக்கு ஆபத்து இல்லன்னா கூட, கூடவே கண்டுபிடிக்கப்பட்ட Pox மற்றும் ஹெர்ப்பீஸ் வைரஸ்கள் மனிதர்களையும் பாதிக்க கூடிய வைரஸ்கள் தான்னு Scientistஆன Clavrie சொல்லி இருக்காங்க.
கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட Zombie வைரஸ்கள் ரொம்பவே குறைவு. ஆனா, பனியால சூழப்பட்டிருக்க ஆர்டிக், அலாஸ்கா காடுகள் மற்றும் கனடா, ரஷ்யா போன்ற நாடுகள்ல இன்னும் நிறைய வகையான Zombie வைரஸ்கள் இருக்கலாம்னு ஆய்வாளர்கள் கணிக்கிறாங்க. அது மட்டும் இல்லாம, நாம கேள்விப்படாத, மருந்து கண்டுபிடிக்காத பழங்கால நோய்களை உள்ளடக்கிய ஒரு time capsule அல்லது இன்னும் பாதிப்போட ஆபத்தை உணர்ற மாதிரி சொல்லணும்னா ஒரு கன்னி வெடி மாதிரி, எக்கச்சக்க விபரீதங்களை வச்சுட்டு காத்திட்டு இருக்கு இந்த Zombie வைரஸ்கள்.
பழமையான வைரஸ் மாதிரி கிடைச்ச சைபீரியா நாடு கூட பிற நாடுகளும் வர்த்தக ரீதியான போக்குவரத்துல இருக்காங்க. அதுமட்டும் இல்லாம, அங்க சூழ்ந்து இருக்க permafrost உறைபனியில பல சுரங்கப் பணி திட்டமிடல்களும் இருக்கு. எண்ணெய் மற்றும் பல கனிம வளங்களுக்காக சைபீரியா பகுதி தோண்டப்படுவது, பல வைரஸ்கள் மனித தொடர்பு பெற்று, நோய் பாதிப்பை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கும்னு சொல்றாங்க ஆராய்ச்சியாளர்கள்.
அது மட்டும் இல்லாம அதிகரிச்சுட்டே வர்ற Global Warmingனால, பனிப்பாறைகள் வேகமா உருகத் தொடங்கி இருக்கறது, இயற்கை சமநிலையை சிதைக்க தொடங்கி இருக்கு. சுற்றுசூழல் பாதிப்பு அளவுகோள்ல இப்ப இல்லனா எப்பவும் இல்லன்ற இடத்துல தான் மனிதர்களாகிய நாம இருக்கோம். எங்கயோ நடக்குற விஷயம் என்ன பாதிக்குமான்னு நினச்ச நம்ம, வெள்ளத்துல சிக்கி தவிச்சதுக்கு காரணம் கூட கால நிலை மாற்ற பாதிப்புகள்னால தான்னு புரிஞ்சு செயல்பட்டா,ஆபத்துல இருந்து தம்பிக்குறோமோ இல்லையோ, நிச்சயம் தள்ளிப்போட முடியும் அப்படின்றதுல மாற்று கருத்து இல்லை.