நடைபெற்று முடிந்த உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக மெகா வெற்றி பெற்றது. இதனையடுத்து அங்கு இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது . அக்கட்சியின் எம்எல்ஏக்களின் கூட்டம் தலைநகர் லக்னௌவில் இன்று நடைபெற்றது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சிமைக்க உரிமை கோரினார்.
ஆளுநர் ஒப்புதல் தந்ததால் யோகி இன்று முதல்வராக பதவியேற்கிறார். இதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.