கிணற்றுள் வெறும் கை கைகளை பயன்படுத்தி “தண்ணீர்” எடுக்கும் அவளை நிலை

306
Advertisement

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் , தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனை உள்ளது.மழையின்மை காரணமாகவும்,ஏறி- குளங்கள்  போன்ற  இடங்களை சரிவர பராமரிக்காமல் விடுவது, என தண்ணீர் சேமிப்பு இல்லாமல் பற்றாக்குறைக்கு முக்கிய காரணாமாக உள்ளது.

இந்நிலையில்,இந்தியாவில் கிராமத்து பெண்கள் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக எந்த ஒரு உதவியின்றி வெறும் கைகள் மற்றும் கால்களை பயன்படுத்தி கிணற்றின் உள்ளே இறங்கி தண்ணீர் எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் பல பகுதிகளில் கடுமையான தண்ணீ பற்றாக்குறை நிலவுகிறது.அம்மாநிலத்தின் குசியா கிராமத்தில் உள்ள கிணறுகள் மற்றும் குளங்கள் வறண்ட நிலையில் காணப்படுகிறது.

இந்நிலையில்,அங்குள்ள மக்கள் கிணற்றில் அடிப்பகுதியில் கிடைக்கும் தண்ணீரை எடுக்க தங்கள் உயிரை பணயம் வைத்து எந்த உபகரணங்கள் உதவியின்றி கைகள் மற்றும் கால்களை பயன்படுத்தி கீழே இறங்கி தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

2019 உலகளாவிய ஆய்வின்படி தண்ணீர் பஞ்சம் அதிகம் நிலவும் 17 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என குறிப்பிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

அதில் மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் நெருக்கடியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்னும் மில்லியன் கணக்கான மக்களுக்கு தண்ணீர் வசதி இல்லை என்பது வரத்திற்குரிய ஒன்றாக உள்ளது.