கடலில் மாயமானதாக இந்திய இராணுவத்தால் தேடப்பட்ட திருமணமான பெண் காதலனுடன் வசமாக சிக்கினார்

27
Advertisement

விசாகப்பட்டினம் அருகே சஞ்சீவய்யா காலனியில் வசிக்கும் அப்பலா ஸ்ரீனிவாஸ் மற்றும் மனைவி சாய் பிரியா (24) இருவரும் ஜூலை 25 அன்று தங்கள் இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாட விசாகப்பட்டினம் ஆர்கே கடற்கரை சென்றுள்ளனர்.

ஒரு கட்டத்தில் மனைவி சாய் பிரியா கடலில் விளையாடச் சென்றதாக கூறப்படுகிறது.பின்பு வெகு நேரம் ஆகியும் தன் மனைவி வெளியே வராததால் போலீசில் புகார் அளித்துள்ளார் ஸ்ரீனிவாஸ்.

Advertisement

புகாரின் அடிப்படையில் , அவரின் மனைவியை தேட கடற்படை வீரர்கள் மற்றும்  கடலோர காவல்படையினர் உள்ளிட்டோர் தேடுதல் வேட்டையில்  ஈடுபட்டு வந்தனர்.ஒருகட்டத்தில் இராணுவ ஹெலிகாப்டர் கொண்டு கடலிலும்  தேடுதல் வேட்டை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,இந்த வழக்கில் அதிர்ச்சித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடலில் மாயமாகி இரண்டு நாட்கள் பிறகு ,  தன் காதலனுடன் நெல்லூரில் காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளார் சாய் ப்ரியா.

சாய் பிரியாவைத் தேடுவதற்கு அரசாங்கம் சுமார் 1 கோடி ரூபாய் செலவிட்டதாக விசாகப்பட்டினம் துணை மேயர் தெரிவித்துள்ளார். தற்போது சாய் ப்ரியாவை நெல்லூரில் இருந்து விசாகப்பட்டிக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.