கண்ணிமைக்கும் நேரத்தில் தண்டவாளத்தைக் கடந்த பெண்ணின் உயிர் தப்பியது

69
Advertisement

கவனக்குறைவாக தண்டவாளங்களைக் கடப்பது என்பது என்றும் ஆபத்து தான்.நாள்தோறும் தண்டவாளத்தை கடக்கும் பொது ஏற்படும்  விபத்து குறித்த செய்திகளை நாம் பார்க்கிறோம்.

இந்நிலையில்,இணையத்தில் இது போன்ற சம்பவம் ஒன்று  பகிரப்பட்டு உள்ளது.பார்க்கும்போது பதறவைக்கும் இந்த வீடியோவில் இரயில் ஒன்று  குறிப்பிட்ட இரயில் நிலையத்திற்குச் சற்று தூரம் முன் சிக்னலுக்காக நின்றுகொண்டு இருக்கிறது.

இதற்கிடையில்,சில மக்கள் கீழே இறங்கி அருகே இருக்கும் மற்றொரு தண்டவாளத்தைக் கடந்து தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர்.அதில், ஒரு பெண் தண்டவாளத்தைக் கடந்து மறுபுறம் சென்றுவிட்டார்.அந்நேரம் அருகே இருந்த தண்டவாளத்தில் மின்னல் வேகத்தில் எதிரே இரயில் ஒன்று வருகிறது.

Advertisement

சில வினாடிகளில் இவர்கள் நிற்கும் இடத்தை கடுக்கருக்கும் நேரத்தில்,அந்த பெண் மீண்டும் தன் குடும்பம் நிற்கும் இடத்திற்கே ஓடி தண்டவாளத்தைக் கடக்கிறார்.கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பெண் உயிர்பிழைத்தார்.இன்னும்  ஒரு வினாடி தாமதம் ஆகியிருந்தால் கூட இரயில் மோதி உயிரிழந்திருப்பார்.

பின், அந்த இரயில் கடந்து போகும்வரை அந்த குடும்பம் அப்படியே கீழே அமர்ந்து விட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.