தானே ஸ்கூட்டியில் கீழே விழுந்து அப்பாவியை தீட்டித்தீர்த்த பெண்  

42
Advertisement

இப்படி கூட நடக்குமா? என வியந்துபார்க்கும் பல வீடியோக்கள் இணையத்தில் உலா வருகிறது.இதற்கிடையில் மற்றொரு வீடியோ ஒன்று இணையத்தில் நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது.

இணையத்தில் உலாவரும் இந்த வீடியோவில்,சாலையில் பெண் ஒருவர் ஆணுடன் ஸ்கூடியில் சென்றுகொண்டு இருக்கிறார்.ஒருகட்டத்தில் இருச்சக்கரவாகனம் நிலைதடுமாறி இருவரும் பொத்யென்று கீழே விழுந்துவிடுகின்றனர்.

அந்நேரம் பார்த்து  பைக்கில் பின்னே வந்த நபர் சுதாரித்து  அவர்கள்  விழுந்த இடத்திற்கு முன்பே நிறுத்தி  விட்டார்.இங்க தான் அந்த நபருக்கு ஒரு  ட்விஸ்ட்.கீழே விழுந்த அந்த பெண் சட்டெனெ எழுந்து நேராக அந்த நபரிடம் வந்து, ” ரோட்ட பாத்து வரமாட்டியா ? கண்ணு எங்கவெச்சுட்டு வர என மிரட்ட, அந்த நபர் பாவம் பயந்துவிடுகிறார்.

Advertisement

“அந்த வண்டிக்கு முன்னாடியே நாம்  நிறுத்திட்டோமே…என்ன ஏன் திட்டறாங்க” என குழம்பி நிற்கிறார் அந்த நபர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..