விஜி என்பவருக்கு இந்த மாதம் 600 யூனிட் பயன்படுத்தியதற்கு ரூ.2750 கட்டணம் வந்துள்ளது.
ஏசிசிடி கட்டணம் 1030 என்று வந்துள்ளது. மொத்தம் 3780 ரூபாய் கட்டணம் வந்திருந்தது. இதுபற்றி விளக்கம் தருமாறு அவர் கேட்டிருந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
ACCD- Addl Current Consumption Deposit என்பது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தங்களின் பாதுகாப்பு வைப்பு தொகை பரிசீலிக்கப்படும். வட்டி பணமும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மின்சார வாரியம் என்ன சொல்ல வருகிறது என்றால், எல்லாரும் மின் இணைப்பு பெறும் பொழுது ஒரு டெபாசிட் தொகை கட்டியிருப்போம்.. ஒவ்வொரு இணைப்புக்கும் சராசரியாக இவ்வளவு மின்சார பயன்பாட்டு ஒதுக்கீடு கணக்கு உண்டு. அந்த அளவை தாண்டும் பொழுது.. நமது இணைப்பின் பயன்பாடு வரம்பை உயர்த்தி ஏற்றார் போல டெபாசிட் தொகையின் பற்றாக்குறை தொகை நம்மிடம் வசூலிக்கப்படும்.
அதுதான் ACCD(கூடுதல் தற்போதைய நுகர்வு வைப்பு) இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சரிபார்க்கப்பட்டு ஏப்ரல்/மே மாத மின் கட்டணத்துடன் வசூலிக்கப்படும். ACCD கணக்கிடும் முறை: கடைசி 12 மாதங்களில் நமது மின்கட்டணத்தின் சராசரி 3 மடங்கு டெபாசிட் தொகை இருக்க வேண்டும்.