கொல்லம் – சென்னை ரயில் செங்கோட்டைக்கு வந்த போது, ரயில் பெட்டியை தாங்கும் அடிச்சட்டத்தில் விரிசலை ஊழியர்கள் உடனடியாக கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது….

157
Advertisement

கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து சென்னைக்கு தினந்தோறும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

கொல்லம்- சென்னை விரைவு ரயிலானது செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வருகை தந்த போது, வழக்கம்போல், செங்கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து ரயில்வே ஊழியர்கள் ரயிலை சோதனை செய்துள்ளனர். அப்போது S-3 கோச் அடியில் சக்கரம் அருகே பயங்கர விரிசல் உள்ளதை லோ பைலட் பார்த்துள்ளார்.

உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பயணிகளை இறக்கி விட்டு விரிசல் ஏற்பட்ட பெட்டி மட்டும் கழற்றி விடப்பட்டது. பின்னர் பயணிகளை மாற்று பெட்டியில் ஏற்றிபயணம் செய்த வைத்தனர். நல்வாய்ப்பாக ரயில்வே ஊழியர்கள் கண்காணித்து விரிசலை கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.