உக்ரைன் ரஷ்யா போர் எதிரொலி கோதுமை ஏற்றுமதி சந்தையை கைப்பற்றுமா இந்தியா

517
Advertisement

உலகின் கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் 80 சதவீத பங்கை வகிக்கின்றன. இந்நிலையில் தற்போது நடந்து வரும் போரால் இந்த நாடுகளின் கோதுமை ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இந்த சூழ்நிலையை இந்தியாவுக்கான அந்நிய வர்த்தக வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது எகிப்து நாட்டுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வது குறித்து இந்தியா பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. மேலும் துருக்கி, சீனா, போஸ்னியா, சூடான், நைஜீரியா, ஈரான் போன்ற நாடுகளுடனும் வர்த்தகத்துறை அதிகாரிகள் பேசி வருகின்றனர். ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்தால் கோதுமையை துறைமுகங்களுக்கு உடனே அனுப்ப வசதியாக சரக்கு ரயில்களையும் தயார் நிலையில் வைக்க ரயில்வே துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்தியாவுக்கு அன்னியச்செலாவணி அதிகரிப்பதுடன் விவசாயிகளுக்கும் நல்ல விலையும் கிடைக்கும் .