வைரலாகும் ஒப்பந்தம் -கணவன்மார்களை டேக் செய்துவரும் மனைவிகள்

305
Advertisement

அனைவரும் தங்கள் “திருமணம்” வாழ்வில் மறக்கமுடியாத நாளாக இருக்கவேண்டும் என்பதால் ஒவ்வொரு ஏற்பாடையும் பார்த்து பார்த்து செய்வார்கள்.பல திருமண வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்,மற்றொரு வீடியோ இந்த வரிசையில் இணைந்துள்ளது.காரணம், மணமக்கள் இருவரும் ஒரு சிறப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அதில், ஒரு மாதத்தில் ஒரு பீட்சா மட்டுமே சாப்பிடவேண்டும்.இரண்டாவது நிபந்தனை, நீங்கள் எப்போதும் வீட்டில் சமைக்கும் உணவுக்கு தான் ‘ஆம்’ சொல்ல வேண்டும். மூன்றாவது நிபந்தனை,மனைவி வீட்டில் எப்போதும் புடவை அணிய வேண்டும்.

நான்காவதாக, இரவு வெகுநேரம் வரை பார்ட்டி செய்ய அனுமதிக்கப்படுகிறது, ஆனால் நம் ஒருவருக்கொருவர் மட்டுமே.

அடுத்து, தினமும் ஜிம்மிற்கு செல்ல வேண்டும். ஞாயிற்றுக்கிழமை காலை உணவை கணவர் செய்ய வேண்டும். ஒவ்வொரு பார்ட்டியிலும் மனைவியின் அழகான புகைப்படங்களை கணவர் எடுக்க வேண்டும், ஒவ்வொரு 15 நாட்களுக்கும் மனைவி ஷாப்பிங் செல்ல வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பல மனைவிகள் தங்கள் கணவரை டேக் செய்து பகிர்ந்துவ வருகின்றனர்.