திண்டுக்கல்லில் சேவல் கண்காட்சி 3 லட்சம் மதிப்பு கொண்ட சேவல்கள் பங்கேற்றன

404
Advertisement

திண்டுக்கல்லில் கிளி மூக்கு, விசிறிவால் சேவல் கண்காட்சி ஏழாவது ஆண்டாக நேற்று நடைபெற்றது.அந்த கண்காட்சியில் கிளி மூக்கு, விசிறி வால் என ரூ.3 லட்சம் மதிப்பிலான சேவல் உட்பட விதவிதமான சேவல்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்றன.இக்கண்காட்சியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா,புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து 300- க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன.

இதில் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை மதிப்பிலான கிளி மூக்கு, விசிறிவால் கருங்கீரி, மயில் சேவல், கொக்கு வெள்ளை, என்னைக்கருப்பு, காகம், மஞ்சள் பொன்ரம், செவலை உள்ளிட்ட பல்வேறு வகையான சேவல்கள் இடம் பெற்றன.

இதுகுறித்து கண்காட்சி நடத்தியவர்கள் கூறியதாவது: பாரம்பரிய நாட்டு ரகத்தை காக்கும் வகையில் இந்த சேவல் கண்காட்சியை நடத்தி வருகிறோம். சிறந்த சேவல்களை தேர்ந்தெடுத்து 25 பேருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்குகிறோம். இரண்டாம் பரிசாக 25 பேருக்கு 25 மிக்சி வழங்குகிறோம்.
.