‘புஷ்பா ’ பாடலுக்கு நடனம் ஆடிய விராட் கோலி

288
Advertisement

அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது.அதிலும் ‘ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் உலகமுழுக்க ஒலித்தது என்றே சொல்லலாம்.

புஷ்பா படத்தில் சமந்தா டான்ஸ் ஆடிய ஊ சொல்றியா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. உள்ளூர் ரசிகர் முதல் மொழிதெரியாத ரசிகர் வரை இந்த பாடலை படாத ஆட்களே இல்லை.

https://www.instagram.com/p/Cc42EiPMgwz/?utm_source=ig_embed&ig_rid=78476d19-66b7-4f68-96dd-eaf38d1685d0

Advertisement

தற்போது விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் பிரபல கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமன் ஆகியோர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அந்த விழாவில் ஊ சொல்றியா பாட்டுக்கு தான் கோலி டான்ஸ் ஆடி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.