சமைக்காமல் பச்சையாக சாப்பிடவே கூடாத காய்கறிகள்! அலட்சியம் காட்டினால் ஆபத்து…

158
Advertisement

விலங்குகள் போன்றவற்றில் இருந்து மனிதர்கள் மேம்பட்ட நிலையில் இருப்பதன் முக்கியமான வெளிப்பாடுகளில் ஒன்று, உணவை சமைத்து சாப்பிடுவது.

ஆனால், சமைப்பதால் சத்துக்கள் குறைவதாக பரவலான கருத்து நிலவி வருவதால், பலரும் காய்கறிகளை பச்சையாகவோ அரைவேக்காட்டிலோ உட்கொண்டு வருகின்றனர். ஆனால், பச்சையாக சாப்பிடக் கூடாத காய்கறிகளை அவ்வாறு சாப்பிடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கீரையில் அதிக அளவு ஆக்ஸலேட் உள்ளது. சமைக்காத கீரையில் உள்ள மிகுதியான ஆக்ஸலேட் உடலுக்கு கேடு விளைவிக்கும்.

முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ரோக்கோலி போன்ற க்ருசிஃபரஸ் வகை காய்கறிகளில் நோய் கிருமிகள் எளிதில் உண்டாகும். பொதுவாக, இவ்வகை காய்கறிகளில் புழுக்கள் இருக்க வாய்ப்பிருப்பதால், சுடுதண்ணீரில் போட்ட பிறகே அவற்றை சமைக்க வேண்டும்.

முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் மஞ்சள் கரு திடமாக மாறும் வரை சமைத்த பின்னரே சாப்பிட வேண்டும். பாஸ்டரைஸ் செய்யப்படாத பாலை பச்சையாக உட்கொள்ளக்கூடாது. முளைகட்டிய பயிர்களில் பாக்டீரியா சீக்கிரமாக பெருகும் என்பதால் அப்படி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

அப்படியே பச்சையாக சாப்பிட வேண்டும் என்றாலும் எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சேர்த்து சாப்பிட வேண்டும். அதிலும் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இது போன்ற பச்சையான உணவுகளை சாப்பிடுவதால் செரிமான சிக்கல்கள் மற்றும் பிற உடல் உபாதைகள் ஏற்படும் என்பதால் அதிக கவனம் எடுத்துக் கொள்வது அவசியம் ஆகிறது.