‘மயோனைஸ்’ மைனஸ்… அதிரவைக்கும் ஆபத்துகள்…

252
Advertisement

மயோனைஸ் என்றாலே,  வாவ்… மயோனைஸா என பெரும்பாலானோருக்கு நாவில் எச்சில் ஊரும். பார்ப்பதற்கு பளபளப்பாக வெண்ணிறத்தில் இருக்கும் இந்த மயோனைஸ் மறைத்து வைத்திருக்கும் கருப்பு பக்கம்,  அதனால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன என்பதுதான் குறித்துதான் இந்த வீடியோவுல டீடெய்லா பார்க்கப்போறோம்…

பொதுவாக மயோனைஸை பர்கர்சாண்ட்விச்கிரில்பிரெஞ்சு பிரைஸ்ஷவர்மாவை போன்றவற்றிற்கு வைத்து சாப்பிடுவோம்.

இரண்டுவகை மயோனைஸ்கள் உள்ளன அவை பாலிலிருந்து செய்யப்படும் வெஜ் மயோனைஸ்பச்சை முட்டையின் வெள்ளைக்கருவிலிருந்து செய்யப்படும் நான்-வெஜ்  மயோனைஸ்.மேற்கத்திய நாடுகளில் மயோனைஸை ஆலிவ் ஆயிலில் தயாரிக்கிறார்கள். நம் நாட்டில் அதை எந்த எண்ணெய்யில் தயாரிக்கிறார்கள் என்பதே தெரியாது. ஒரு டேபிள் ஸ்பூன் மயோனைஸ் என்பது 15 கிராம் ஆகும். அதில், 100 லிருந்து 110 கலோரிகள் உள்ளன.

குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் மயோனைஸை ஷவர்மாவுடன் வைத்து சாப்பிட்டு ரசித்து சாப்பிட தனி கூட்டமே இருக்கிறது. ஷவர்மாமயோனைஸ் சாப்பிடுவதால் ஃபுட் பாய்சன் ஆகி உயிரிழப்புகூட ஏற்பட்டது. அல்ல அல்ல ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.

ஷவர்மாவில் கறி அதிகமாக சேர்க்கப்படுகிறது அவ்வாறு சேர்க்கப்படும் கறி  சரியான முறையில் வேகவைக்கப்படாததாலும் மயோனைஸில் இருக்கும் பாக்டீரியாக்களினாலும் வயிற்றுப்போக்கு உண்டாகி உயிரிழப்பை ஏற்படுத்திவிடுகிறது. வாந்திவயிற்றுப்போக்கு ஏற்படுத்தக்கூடிய ஷிகெல்லா பாக்டீரியாவும் (Shigella bacteria), வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி டைஃபாய்டு கொண்டுவருகின்ற சால்மோனெல்லா பாக்டீரியாவும் இந்த பிரச்சனைக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.

பச்சை முட்டையை கழுவாமல் மயோனைஸ் செய்ய அப்படியே ஊற்றுவதால் பாக்டீரியாக்கள்  கலந்துவிடும். இந்தப் பாக்டீரியாக்களால் ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு ஏற்பட்டுஉடம்பிலுள்ள நீர்ச்சத்துக்கள் குறைந்து உயிரையே இழக்கும் அபாயம் ஏற்படும்.

உமிழ்நீர்பித்தநீர்கணைய நீர்சிறுகுடலில் சுரக்கும் நீர் என நம் உடலில் 10 லிட்டர் நீர் தானாகவே உற்பத்தி ஆகும். இதுஉற்பத்தி ஆவதால்தான் நாம் சாப்பிடும் உணவுகள் உடனடியாக ஜீரணம் ஆகின்றன. ஆனால்மயோனைஸிலுள்ள ஷிகெல்லா பாக்டீரியாக்கள் உடம்புக்குள் சென்று வயிற்றுப்போக்குமூலம் நம் உடம்பிலுள்ள நீர்ச்சத்தை விரைவாக வெளியேற்றிவிடுகிறது. இதனை கண்டறிந்து சுதாரித்துக்கொண்டு மருத்துவரிடம் சென்றால் மருத்துவர்கள் சரிசெய்துவிடுவார்கள்இல்லையெனில் நிலைமை கவலைக்கிடம் தான்.

இது கர்ப்பிணிப் பெண்கள்இளம் குழந்தைகள் அல்லது வளர்சிதை மாற்ற உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களை பெரிதும் பாதிக்கலாம்.விற்பனைக்காக தயாரிக்கப்படும் மயோனைஸில் ஆயுளை நீட்டிக்கவும் சுவையை அதிகரிக்கவும் பல இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

மயோனைஸே ஆபத்துதான்… அதில் ரசாயனம் என்றால் ஹப்பப்பா…நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.

சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் பிரச்சனை இல்லை.. ஆனால் இன்றைய காலகட்டத்தில் நம் வீட்டை தாண்டி உணவுகள் சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்றால் அது மில்லியன் டாலர் கேள்வி தான்.

-ரிதி ரவி