போர் நிறுத்தப்படுகிறதா ? புடினுடன் ஆலோசனை

245
Advertisement

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மிக மோசமான அகதிகள் நெருக்கடியில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்த நிலையில்

உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை தொடர்கிறது.போர் நிறுத்தப்பட்டு பொது மக்களின் உயிர்கள் பறிபோவதை உடனே தடுத்து நிறுத்தவேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், இருநாட்டு அதிபர்களை சந்தித்து பேசவுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ்,

முதல்கட்ட தகவின்படி ரஷ்யா சென்று அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, உக்ரைன் ரஷ்யா இடையேயான பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் படைகள் பின்வாங்குவது குறித்து எந்த ஒரு உடன்பாடும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வரும் 26-ம் தேதி ரஷ்யா செல்கிறார். அங்கு அதிபர் விளாடிமிர் புடினையும், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது உக்ரைன் விவகாரம் குறித்து புடினிடம் அன்டோனியோ குட்டரெஸ் அறிவுறுத்தவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சந்திப்பை தொடர்ந்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியையும் அன்டோனியோ குட்டரெஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.