உக்ரைன் நாட்டின் மீது கடந்த 7 நாட்களாக ரஷ்ய ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுப்பதால் போர் உக்கிரம் அடைந்துள்ளது .
இதனிடையே நேற்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது,உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை ரஷ்யா கடந்தவாரம் தொடங்கியது. ஒருவேளை உக்ரைன் அணு ஆயுதங்களைப் பிரயோகப்படுத்தினால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அது மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என்றும் சொல்லியுள்ளார் . இது 3-வது உலகப் போராக மாறினால் ,அணு ஆயுதங்களை பயன்படுத்தப்படும் போராகவும் , அதனால் பேரழிவை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார் .