14-வது நாளாக உக்ரைன் மீதான தாக்குதல் நீடிக்கும் நிலையில்
ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடவடிக்கைகளை குறைத்துள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்ய ராணுவ தாக்குதலின் தீவிரம்
குறைந்திருப்பதாக உக்ரைன் ராணுவ தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது
கீவ், சுமி, கார்கிவ், மரியுபோல், மிகோலிவ், செர்னிஹிவ்,
ஆகிய நகர்களை கைப்பற்றுவதில் ரஷ்ய ராணுவம் தீவிரம் காட்டிவந்த வேளையில் நேட்டோ கூட்டமைப்புடன் இணையும் நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம் என உக்ரைன் அதிபர் விளோடிமிர்
ஜெலன்ஸ்கி தெரிவித்த நிலையில் தாக்குதல் வேகம் குறைந்தது
ரஷ்ய படைகள் பெரிய அளவில் இழப்பை சந்தித்து வருவதால்
தாக்குதல் வேகம் குறைந்திருப்பதாகவும் உக்ரைன் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது .