எலோன் மஸ்க்கை தொடர்புகொண்டு நன்றி தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி!

359
Advertisement

உக்ரைன் நாட்டு ப்ரெசிடெண்ட் Zelenskyy,பிரபல தொழிலதிபர் மற்றும் உலகின் NO.1 பணக்காரரான Elon Musk உடன் காண் கால் மூலம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

மேலும் அவர் Starlink செயற்கைக்கோள் தொழில்நுட்பம் வரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, SPACEX மற்றும் டெஸ்லா தலை நிர்வாக அதிகாரியானா எலோன் மஸ்க் ஆகியோருடன் பேசியதாகக் கூறினார்,

வரும் வாரத்தில் நாடு அதிக ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெலென்ஸ்கி தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர்,”எலோன் மஸ்க் உடன் பேசினேன், உக்ரைனை வார்த்தைகளாலும் செயலாலும் ஆதரித்ததற்காக அவருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

அடுத்த வாரம், உக்ரைனின் பாதிக்கப்பட்ட நகரங்களுக்கான மற்றொரு தொகுதிகளில் Starlink அமைப்புகளைப் பெறுவோம்.

சாத்தியமான விண்வெளி திட்டங்கள் பற்றி விவாதித் தோம் ஆனால் போருக்குப் பிறகு நான் இதைப் பற்றி பேசுவேன்”,என்று அவர் தெரிவைத்துள்ளார்.