பெற்றோரை கண்டுகொள்ளாமல்  நடுரோட்டில் விளையாடிய இரு யானை குட்டிகள்

47
Advertisement

இரண்டு குட்டி யானைகள் தங்கள் பெற்றோர்கள் உணவு தேடுவதில் மும்முரமாக இருக்கும்போது நடுரோட்டில் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தனது ட்விட்டரில் பகிர்ந்த இந்த வீடியோவில், சாலை ஓரத்தில் சில யானைகள்  நின்றுக்கொன்று இருக்கிறது.அந்நேரம் அந்த கூட்டத்திலிருந்த இரு யானை குட்டிகள் ‘தத்தக்க புத்தாக்க’ என்று நடுரோட்டில் வந்து ஒன்றுடன் ஒன்று விளையாடத்தொடங்கிறது.

இதை பார்க்கும்போது,அந்த குட்டிகள் ‘ நீ வாடா நாம்ப விளையாடலாம்..அப்பாவும் அம்மாவும் உணவு தேடட்டும் என்பது போலவும்.குட்டிகளின் பெற்றோரும் மும்மரமாக  உணவைத் தேடுவதை போல உள்ளது என இந்த வீடியோவை ரசித்துவருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement