KK க்கு நெகிழ வைக்கும் விதம் அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்- வைரலாக வீடியோ

227
Advertisement

பிரபல பின்னணி பாடகர் கே கே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், மே 31-ஆம் தேதியன்று கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு  உயிரிழந்தார்.

அவரின் மரணம்  நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, பெங்காளி, குஜராத்தி மொழிகளில் பல்வேறு பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதம் கொல்கத்தாவில் நந்தன் திரையரங்கில் அவரின் ரசிகர்கள் 200 பேர் கூடி, அவரின் மிகப்பெரிய வெற்றிப்பாடலான  “பால்” என்ற பாடலை பாடி தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் , 200 ரசிகர்களில் ” 100 பேர் கிடாரிஸ்டுகள் மற்றும் மற்ற 100 பேர் பாடகர்கள் “. அவரின் ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.