மாணவியை காற்றுவீச வைத்து வகுப்பறையில் நன்றாக உறங்கிய ஆசிரியை

313
Advertisement

அடுத்த தலைமுறையினரை பண்பாளர்களாக, பொறுப்பானவர்களாக உருவாக்கும் மிக உன்னதமான பணி ஆசிரியர் பணி. அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்திற்கு முன்னதாக ஆசிரியரைக் குறிப்பிட்டார்கள்

ஆசிரியர்களை விட்டுக்கொடுக்காத மாணவர்களையும்,மாணவர்களை விட்டுக்கொடுக்காத ஆசிரியர்களையும் நாம் பாத்துருக்கிறோம்.சில நேரங்களில் வருந்தத்தக்க சம்பவங்களும் நிகழ்த்துவிடுகிறது.

இந்நிலையில் இணையத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.தகவலின் பிடி , வீடியோவில் பீகார் மாநிலம் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் நாற்காலி மீது அமர்ந்து நன்றாக உறங்கிக் கொண்டுருக்கிறார்.

அந்த ஆசிரியைக்கு மாணவி ஒருவர் கைவிசிறி மூலம் காற்று வீசிக்கொண்டு இருக்கிறார்.சிறுமி நின்றபடி காற்றுவீச,ஆசிரியை நன்றாக உறங்குவதை நபர் ஒருவர் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் சர்ச்சையானதை அடுத்து ,சம்மந்தப்பட்ட ஆசிரியையிடம் விளக்கம் கேட்டபோது,தனக்கு உடம்பு சரியில்லை,இதன் காரணமாக தான் அந்த மாணவியை காற்றுவீச வைத்து வகுப்பறையில் உறங்கியதாக கூறியுள்ளார்.

இந்த வீடியோ பார்த்து அதிருப்தி அடைந்த நெட்டிசன்கள்,அம்மாநிலத்தின் கல்வியின் நிலை குறித்து வருத்தமளிப்பதாகவும்,மாணவர்கள் படிப்பை பாதிக்கும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என தங்கள் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.