மதுரை அருகே நேற்று பெய்த கனமழையினால் சுரங்கபாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கி கொண்ட அரசு பேருந்தை போக்குவரத்து துறை பணியாளர்கள் மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்…

111
Advertisement

பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுரங்கப்பாதையில் வழக்கம் போல் மழை தண்ணீர் முழுவதுமாக தேங்கியிருந்தது. 

இந்நிலையில், மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து 80 பயணிகளுடன் அரசு பேருந்து  திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. இதையடுத்து, பேருந்து சுரங்கப்பாதையில் இருந்த மழைநீரில் சிக்கிக்கொண்டது. இதனால், அரசு பேருந்தில் கல்லூரிக்கு செல்வதற்கு பயணம் செய்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தண்ணீரில் இறங்கி கல்லூரிக்கு நடந்தே செல்லும் சூழல் உருவாகியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மதுரை மாநகர போக்குவரத்து துறை பணியாளர்கள் அரசு பேருந்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.