சிக்னல் கோளாறு காரணமாக தாம்பரம் – செங்கல்பட்டு இடையே ரயில் சேவை தாமதம்

198

சிக்னல் கோளாறு காரணமாக தாம்பரம் – செங்கல்பட்டு இடையே ரயில் சேவை தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர். தாம்பரம் – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை சிக்னல் கோளாறு காரணமாக, மின்சார ரயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டது. இதனால், ரயில் பயணிகள் அவதி அடைந்தனர். ரயில் தாமதம் காரணமாக, பணிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக பயணிகள் கவலையுடன் தெரிவித்தனர்.