மகாராஷ்டிராவில் நடந்த கோர விபத்து, பரிதாவமாக 12 பேர் உயிரிழந்தனர்

232

மகாராஷ்டிராவில், சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்ததில், 12 பேர் உயிரிழந்தனர். மேலும்32 பேர் படுகாயமடைந்தனர்.

நாசிக் நகரில் அவுரங்காபாத் சாலையில் சென்ற சுற்றுலா பேருந்து,அதிகாலை 5 மணியளவில் லாரி மீது மோதியது. இதில், பேருந்து தீப்பிடித்து எரிந்ததால், பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் வெளியே  வர முடியாமல் தவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். ஆனாலும், ஒரு குழந்தை உள்பட 12 பயணிகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

மேலும் 32 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.