சிற்பத்தை உடைத்த குழந்தை – பெற்றோர்களுக்கு 5 லட்சம் பில் போட்ட கடைக்காரர்

312
Advertisement

குழந்தைகள்  என்றாலே குதூகலம் தான்.ஆனால் குழந்தையின் பெற்றோர்களிடம் கேட்டுப்பார்த்தால் தான் தெரியும் அவரின்களின் நிலை. அப்பாக்கள் கூட பகல் நேரங்களில் தப்பித்துவிடுவார்கள். அம்மாக்கள் தான் பாவம்.

குழந்தைகளை வெளியில் அழைத்துச்செல்லும் பொது சில அப்பாக்கள் கவனமாக இருப்பார்கள்.”எங்க டா, ஐஸ் கிரீம் , விளையாட்டு சாமான் விற்கிறவன் வந்துடுவாங்களோனு.அதையும் கடந்து போன குழந்தைகளை ஈர்க்கும் வகையில் விளையாட்டு பொருட்கள் விற்பனை கடை ஒரு கி.மி வைத்துருப்பார்கள்.

இதுக்குமேல எங்க போறது என்று, ஒரு கடைக்குள் குழந்தையுடன் சென்ற பெற்றோர் நிலைமை தான் சீனாவில் வைரலாகி வருகிறது.

ஹாங்காங்கில்  பொம்பை கடைக்கு சென்ற அந்த பெற்றோர் ,குழந்தைக்கு தங்களால் முடிந்ததை வாங்கலாம் என அங்கிருந்த விளையாட்டு பொருட்களை பாத்துக்கொண்டு இருந்தனர்.அவர்கள் ஒருபுறம்  சிவனேனு பார்த்துகொண்டுருக்க,குழந்தை உற்சாகத்தில் கால்கள் தரையில் பட்டும் படாமல் விளையாடிக்கொண்டு இருந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் தடுமாறும் சிறுவன்,அந்நாட்டு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் தங்க முலாம் பூசப்பட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிற்பம்  மீது சாய்த்து உரச,அது கீழே விழுந்து உடைந்து விடுகிறது.

உடைந்த சிற்பத்தின் விலை சுமார்  4 லட்சத்து 80 ஆயிரம் என கூறப்படுகிறது.இது குறித்த அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது,அந்த குழந்தை தன கரணம் என தெரியவர அந்த கடைக்காரன் உடைந்த சிற்பத்திற்கு 5 லட்சம் பில் போட்டு கையில் கொடுத்துள்ளார்.

என கொடுமை சார் இது,அப்படினு நீங்க கேக்கறது கேக்குது.பின்பு அந்த பெற்றோர்கள் தங்கள் நிலைமையை விளக்கினார்.தவறுதலாக உடைந்த சிற்பத்திற்கு 5 லட்சம் கேட்பது நியாயம் இல்லை என வாதிட்டனர்.இந்த சம்பவம் அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, அந்த பெற்றோர்களுக்கு ஆதரவு கூடிவருகிறது.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.சிறுவன் சிற்பம் விழுவதை தடுக்க முயன்றதும் பதிவாகி உள்ளது.இந்த தற்செயலான சம்பவத்திற்காக குழந்தையை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டதாக  அந்த பெற்றோர்  தெரிவித்தனர். தற்போது  குழந்தையின் பெற்றோருக்கு மக்கள் தங்கள்  அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.