தமிழ்நாட்டில் 97.8 சதவீத கிராமங்களில் கழிவறை வசதி – மத்திய அரசு தகவல்..!

94
Advertisement

தமிழ்நாட்டில் 97.8 சதவீத கிராமங்களில் கழிவறை வசதி உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 இரண்டாம் கட்ட கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை நாட்டின் 50 சதவீத கிராமங்கள் எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 97.8 சதவீத கிராமங்கள் இந்த நிலையை அடைந்துள்ளன. தெலங்கானாவின் அனைத்து கிராமங்களும், கர்நாடகாவில் 99.5 சதவீத கிராமங்களும், உத்தரபிரதேசத்தில் 95.2 சதவீத கிராமங்களும் திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலைக்கு முன்னேறியுள்ளன. இந்த தகவல்களை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.