பொதுவாக நம்மில் பெரும்பாலானோருக்கு அரசு வேலை வாங்க வேண்டுமென்ற கனவு இருக்கும் இருக்கும். அதற்காக அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுகளின் மீது விழிவைத்து காத்திருப்போம். மேலும் அரசு பணிகளுக்கான தேர்வுகளில் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வர். அவ்வாறு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் முக்கியமான ஒன்று TNPSC.
இந்நிலையில்தான், குரூப் 4 தேர்விற்கான அட்டவணை நேற்று வெளியானது. இதுகுறித்தான, மேலும் சில விவரங்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழக அரசு துறையில் உள்ள VAO, இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட 6, 244 பதவிகளுக்கு TNPSC குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது.
குரூப் 4 தேர்வானது 2024 ஜூன் மாதம் நடக்க உள்ளது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க நேற்று ஆன்லைன் பதிவுசெய்வது தொடங்கியது. இந்த தேர்விற்கு இரண்டு வகையான வினா தாள்கள் வழங்கப்படும். தமிழ் தகுதித்தாள் 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் இடம் பெரும், பொதுப்பாடங்களில் 75 கேள்விகள் மற்றும் அறிவுத்திறன் சோதனை கேள்விகள் 25 என 100 கேள்விகளுக்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
மொத்தமாக, 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இதில், குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் பெற்றவர்கள் தேர்ச்சி பட்டியலில் இடம் பெறுவார்கள்.
TNPSC குரூப் 4 தேர்விற்கான ஆன்லைன் பதிவு துவக்கம் ஜனவரி 30, 2024 ஆம் தேதி துவங்கியது, ஆன்லைன் பதிவு நிறைவு தேதியாக பிப்ரவரி 28 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பிழைத்திருத்த விரும்புவோர் மார்ச் 4 லிருந்து 6 ஆம் தேதி வரை பிழைகளை திருத்திக்கொள்ளலாம்.
குரூப் 4 தேர்வு நடக்கும் தேதி ஜூன் 9 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு நடைபெறுகிறது.
TNPSC குரூப் 4 தேர்வர்கள் மேலும் விவரங்களை www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.