தபால் துறையில் 40,889 காலியிடங்கள்.. தேர்வு கிடையாது..10ஆம் வகுப்பு முடிச்சா அப்ளை பண்ணுங்க!

473
Advertisement

10ஆம் வகுப்பு தகுதியுடன், தேர்வு இல்லாத தபால் துறை பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், தகுதிகள், காலியிடங்களின் விவரம், எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்களை இப்பதிவில் பார்ப்போம்.

தபால் அலுவலர், உதவி தபால் அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு கிடையாது.

பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்தே பணி வழங்கப்படும் என்றாலும் தமிழ் மொழியை பயின்றிருப்பது அவசியம். தபால் துறையில் 40,889 காலியிடங்களும், அதில் தமிழ்நாட்டில் மட்டும் 3,167 காலி பணியிடங்களும் உள்ளன.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி, சைக்கிள் ஓட்ட தெரிந்திருப்பது மற்றும் 18இல் இருந்து 40 வயதிற்குள் இருப்பது வேலைக்கான தகுதியாக பார்க்கப்படுகிறது. SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

பத்தாயிரத்தில் இருந்து இருபத்து நாலாயிரம் வரை ஊதியம் கிடைக்கும் தபால் வேலை வாய்ப்புகளுக்கு  https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க பிப்ரவரி 16ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.