ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இனி பாக்கெட்களில் மட்டுமே அரிசி வழங்கப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து புதிய அறிவிப்புகளை வெளியிட்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,
இந்திய அஞ்சல் துறை வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.
தற்போது, புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகள் வட்ட வழங்கல் அலுவலகம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மண்டல அலுவலகங்கள் மூலமாக பெற்று வருகின்றனர்.
மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களை தேர்வு செய்து பரிசு வழங்கப்படும்’ என்று
பொதுவிநியோக திட்டத்தின் கீழ் கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் வழங்கப்படும். கூட்டுறவு துறைக்கான ஒருங்கிணைந்த பயிற்சி கொள்கை உருவாக்கப்படும். நியாயவிலை கடைகளில் பாக்கெட் மூலம் அரசு வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்