திருப்பூர் அருகே, நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் தொடுத்த வழக்கில், பல்லடம் ராயர்பாளையம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற 3 மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, வீடுகளை அகற்ற வந்த வருவாய்த் துறை மற்றும் போலீசாருடன் அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது. சில பெண்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.