உலகின் முதல் ஸ்மார்ட்போனின் பெயர் IBM Simon.
இது கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1994
ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் ஸ்மார்ட்போனான சைமன் அறிமுகமானது.
அரை கிலோ எடைக்கு மிகவும் கனமான ஸ்மார்ட்போனாக இது தயாராகிறது.23 செ.மீ நீளம் கொண்ட அதை பாக்கெட்டில் வைத்துக்கொள்வது அவ்வளவு எளிது கிடையாது.
இது ட்ச ஸ்கிரீன் தொழில்நுட்பமும் கொண்டிருந்தது. இந்த ஸ்மார்ட்போனில் எழுதுவதற்கான சாப்ட்வேர் இருந்தது. நாட்காட்டி இருந்தது.அதில் நிகழ்ச்சிகளை குறித்துக்கொள்ளலாம். இதன் வழியே பேக்ஸ் அனுப்பலாம்,பெறலாம்.
செயலிகளும் (ஆப்ஸ்) இதில் இருந்தன.சில கேம்களும் இருந்தன.
இதில் போனும் பேசலாம். ஆனால் இணைய வசதி கிடையாது.
இந்த போனின் விலை அப்போதே 899 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டது.