கற்பிக்க யாரும் இல்லை- ரூ.24 லட்ச சம்பளத்தை கல்லுரிக்கு திருப்பி கொடுத்த பேராசிரியர்

210
Advertisement

பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் உள்ள நிதிஷ்வர் கல்லூரியின் ஹிந்தி உதவிப் பேராசிரியராக உள்ளவர்  லல்லன் குமார்.கொரோனா தொடங்கியதில் இருந்து காணொளி மூலம் கல்வி நிறுவனங்கள்  வகுப்புகளை ஏற்பாடு செய்து கற்பித்து வந்தது.

தற்போது , நேரடி வகுப்புகள் தொடக்கி வகுப்புகள் நடந்துவரும் நிலையில், “நான்  போதிக்க   மாணவர்கள் இல்லை எனக் கூறி, தனது இரண்டு ஆண்டு ஒன்பது மாத சம்பளமாக வாங்கிய  ரூ.24 லட்சத்தை பிஆர் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்தின் பதிவாளரிடம் திருப்பிக் கொடுத்துள்ளார் லல்லன் குமார்.

மேலும் அவர் கூறுகையில், தன்னை மற்றொரு கல்லூரிக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து கல்லூரியின் சார்பில் மறுக்கப்பட்டு வருகிறது.மாணவர்கள் இல்லாமல் சம்பளம்  மட்டும் நான் வாங்க முடியாது என கூறுகிறார்.

இது குறித்து  பல்கலைக்கழகம் சார்பில், ஒரு மாணவர்கள் கூட இல்லை என்ற  குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளமுடியாது மேலும் அவர் திரும்பி கொடுத்ததாக சொல்லப்படும் ரூ.24 லட்சத்தை நாங்கள் வாங்கிகொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.