ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க கூட்டணி பிளவு ஏற்பட வாய்ப்பு

275
Advertisement

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், கடந்த 10 நாட்களில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 3 முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணித்ததால், கூட்டணிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் உள்ளது. இந்நிலையில், பீகார் அரசியலில் நிதிஷ்குமார் – மாநில பா.ஜ.க தலைவர்கள் இடையே ஆட்சி அதிகாரத்தில் மோதல் போக்கு காணப்படுகிறது.

அக்னிபத் திட்டத்திற்கு ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்ததற்கு, ​​மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் ஐக்கிய ஜனதா தளத்தை கடுமையாக விமர்சித்தார். ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க கூட்டணிக்குள் மாநில அளவில் மோதல்கள் அதிகரித்து வருவதால், தொடர்ந்து பாஜக சார்ந்த கூட்டங்களை நிதிஷ்குமார் புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டணிக்குள் பிளவு ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.