காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கலாம், ஆனால் முடிவு எடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

169

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கலாம், ஆனால் முடிவு எடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேகதாது அணை விவகாரம் குறித்து, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் பங்கீடு செய்யவில்லை என்றும் தமிழக அரசு சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. கர்நாடக அரசு தரப்பிலும் காரசார வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம், மேகதாது பற்றி விவாதிக்கலாம், \ஆனால் முடிவு எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.