இழுத்தால் பாயை போல கையோடு வந்த ரோடு..அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

155
Advertisement

மஹாராஷ்டிராவில் ஜல்னா மாவட்டத்தில் புதியதாக போடப்பட்ட ரோடு கையோடு வந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முற்றிலும் தரமற்ற முறையில் போடப்பட்டுள்ள இந்த ரோட்டை, ஓரங்களில் எடுத்தால் மொத்தமாக பாயை சுருட்டுவது போல வரும் காட்சிகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அது மட்டுமில்லாமல், ரோட்டுக்கு அடியில் இருக்கும் துணி சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. நகைச்சுவையாக இருந்தாலும், உள்ளாட்சி அமைப்புகள் எவ்வளவு தரமற்ற முறையில் செயல்படுகின்றன என்பதற்கு இந்த வீடியோ சான்றாக அமைவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.