பாட்டிலால் விடுதி ஊழியரை தாக்கிய 8 பேரை கைது செய்தது போலீசார்

270

ஏற்காட்டில் மது போதையில் பாட்டிலால் விடுதி ஊழியரை தாக்கிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.  பாண்டிச்சேரி மூலக்குளம் பகுதியில் இருந்து விஜய் சங்கர் என்பவர் தனது நண்பர்களுடன் தனியார் தங்கும் விடுதியில் அறை  எடுத்து  தங்கி உள்ளார். அதே விடுதியில் கோவையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கியுள்ளனர்.

விஜய்சங்கர் தனது நண்பர்களுடன்  குடித்துவிட்டு மது போதையில் பக்கத்து அறையில் இருந்தவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. உடனடியாக கோவையை சேர்ந்த குடும்பத்தினர் விடுதியில் புகார் அளித்துள்ளனர்.

இதனை தட்டிக்கேட்ட விடுதி ஊழியர்களையும் அவர்கள் கடுமையாக பேசியதுடன், மதுபாட்டிலால் தாக்கி உள்ளனர். போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து 8 பேரை கைது செய்தனர்.